Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவினரின் ஆர்ப்பாட்டமும்..! திமுகவினரின் போராட்டமும்..! சூடு பிடிக்கும் தமிழக அரசியல்களம்..

பாஜகவின் ஆர்ப்பாட்டம்

காவிரி நதி நீரை பெற்றுத்தராத ஆளும் திமுக ஆட்சியை கண்டித்து பிஜேபி கட்சியினர் இன்று (ஜூலை -23) தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சி ,ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இவ்வார்ப்பாட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் . மேலும் ,தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகளான சட்ட ஒழுங்கு ,மேகதாது அணை விவகாரம் போன்ற பல்வேறு விவகார பிரச்சனைகளை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆர்பாட்டமானது நடைபெறவுள்ளது .

திமுகவின் போராட்டம்

மணிப்பூர் வன்முறை ,படுகொலை ,மற்றும் மணிப்பூர் மலைவாழ் ‘குகி’ இன பெண்கள் இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி பெண்கள் ஜூலை -23 ஆனா இன்று மற்றும் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார்.இப்போராட்டமானது திமுக எம்பி கனிமொழி அவர்களின் தலைமையில் இப்போராட்டமானது நடைபெறவுள்ளது .

ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான இடதுசாரிகள் தங்களது போராட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி நடத்திவருகின்றனர் .மேலும் ,மற்ற கட்சிகளின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் , மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தங்களது போராட்டம் நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளனர் .

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்து மாநிலத்தில் ஆளும் திமுகவும், மாநிலத்தில் ஆளும் திமுகவை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜகவும் தீவிர அரசியலில் குதித்து உள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

Exit mobile version