Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு! 

ஒரே நாடு ஒரே வரி என்ற பாஜகவின் எண்ணம் ஒருநாளும் நடக்காது! மக்களவையில் கனிமொழியின் அனல் தெறிக்கும் பேச்சு! 

மக்களவையில் இன்று நடந்த கூட்டத்தில் பாஜகவை தாக்கி திமுக எம்பி கனிமொழி பேசினார்.  இதில் அவர் மத்திய அரசு தமிழக அரசின் பரிந்துரைகளை கேட்பதில்லை. எங்களது விவாதங்களைக் கேட்க நேரம் ஒதுக்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

மக்களவையில் அவர் பேசியதாவது,

இந்த நாடு ஒரே நாடு! ஒரே வரி! ஒரே சந்தை! ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக அரசு நினைக்கிறது. ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது. மாநிலங்களின் உரிமைகளை பறிக்க முயற்சிகளை செய்கிறீர்கள். மக்கள் நல அரசு என்பதற்கும், இலவச திட்டங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்களை நீங்கள் புரிந்துக்கொள்ள மறுக்கிறீர்கள்!

தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் ஆர்.என்.ரவி காலதாமதம் செய்து வருகிறார். தமிழ்நாடு மட்டும் இந்த விவகாரத்தில் நிற்கவில்லை. மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களின் கவர்னர்களும் இதையே பின்பற்றி வருகின்றனர்.

ஆளுநர்களுக்கு கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தமிழகத்தில் தேர்தல் இல்லை என்பதால் குடியரசுத் தலைவர் அவர்கள் உரையில் திருவள்ளுவரை மறந்துவிட்டார். மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இந்திய இளைஞர்கள் சுமார் 4 கோடி பேர் வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எங்களது பரிந்துரைகளை மத்திய அரசு காது கொடுத்து கேட்பதில்லை. சட்டம் தொடர்பான விவாதங்களுக்கு மத்திய அரசு நேரம் ஒதுக்குவதில்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

 

Exit mobile version