பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

0
101
#image_title

பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு!! இப்போ எப்படி இருக்கிறார்?

தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.இக்கட்சியின் மூத்த தலைவரும்,தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருக்கும் திரு.ஹெச்.ராஜா அவர்கள் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார்.

இவர் பாஜக சார்பில் நடத்தப்படும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று ஆளும் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவதை வழக்கமாக வைத்திருப்பவர்.இவர் பேசினாலே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி சர்ச்சை மன்னனாகவே வலம் வருகிறார்.

எந்த கட்சி,யார் என்றும் பார்க்காமல் தான் நினைப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுவதால் அது சர்ச்சையாக மாறி விடுகிறது.இதனால் இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது.சமீபத்தில் தன் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வரை சென்ற இவருக்கு மிஞ்சியது ஏமாற்றமே.கடுமையாக சொற்களை பயன்படுத்துவது மற்றும் அடுத்தவர் மனம் புண்படும் படி பேசுவதை நிறுத்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியும் அவர் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வருகிறார்.

கடந்த அக்டோபர் 6 அன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட இவர் அடுத்து நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க நேற்று சென்னை சென்றார்.இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் என்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார்.ஹெச்.ராஜா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் பாஜக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.ஹெச்.ராஜா அவர்களின் உடல்நிலை சீரக இருப்பதாகவும்,அவருக்கு தொடர்ந்து வழங்க வேண்டிய அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.அதனால் சில தினங்களுக்கு அன்றாட பணிகளில் ஈடுபட முடியாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.