ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள உள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு பதிவுகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது உள்ள வாக்கு கணக்குகளை பார்த்தல் பாஜக செய்த பலன்கள் எல்லாம் வீணாகும் என தெரிகிறது.
மேலும் ஜார்கண்டில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிவந்தது. ஆனால் வாக்கு எண்ணிகையில் முதலில் பாஜக முன்னிலை பெற்று வந்தது. பிறகு பாஜக விற்கு வாக்கு எண்ணிக்கை குறைவாக இருந்தது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை உள்ள நிலையில் இந்திய கூட்டணி கூடுதலாக 10 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
அதனால் இந்த சூழல் படி பார்த்தால் பாஜக தோல்வி அடையும் என தெரிகிறது. மேலும் இந்த நிலையில் சம்பாய் சோரனின் செல்வாக்கு பாஜகக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு பிரச்சாரம், சம்பாய் சோரனின் செல்வாக்கும் இங்கு பயன் பெறவில்லை, என இந்த வாக்கு எண்ணிகையில் தெரிகிறது. இதனை தொடர்ந்து இந்திய கூட்டணி 51 தொகுதிகளில் முன்னணி வகுக்கிறது.
காங்கிரஸ் 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி –31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 27 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.