உங்கள் கழுத்தை சுற்றி கருப்பா இருக்கா? கவலையை விடுங்க இதை மட்டும் 1 முறை தடவுங்கள்!!

0
128
Black around your neck? Don't worry just apply this 1 time!!

முகத்தை அழகாக வைத்துக் கொள்ள அவ்வளவு கொள்ளும் நாம் உடலின் மற்ற பகுதியை பராமரிக்க மறந்து விடுகின்றோம்.என்னதான் முகம் அழகாகவும் கலராகவும் இருந்தாலும் கழுத்து,கை போன்றவை கருமையாக இருந்தால் அவை அழகையே சீர்குலைத்துவிடும்.

கழுத்து செயின் அணிதல்,டெட் செல்கள் அதிகம் தங்குதல் மற்றும் வெயில் போன்ற காரணங்களால் கழுத்து பகுதியை சுற்றி அடர் கருமையாகவிடுகிறது.முகம் அழகாக இருந்தாலும் கழுத்து கருமை இருந்தால் அவை பெரிய குறையாகவே இருக்கும்.

கழுத்து கருமையை சோப் பயன்படுத்தி நீக்குவது என்பது கடினமான செயல்.சில இயற்கை குறிப்புகளை பின்பற்றி கழுத்து கருமையை போக்க வேண்டும்.

குறிப்பு 01:

*கற்றாழை

ஒரு கற்றாழை மாடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்து கொள்ளவும்.பிறகு இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கழுத்தை சுற்றி தடவி ஒரு இரவு அப்படியே வைக்க வேண்டும்.மறுநாள் காலையில் குளிர்ந்த நீர் பயன்படுத்தி கழுத்தை சுற்றி துடைக்கவும்.இப்படி செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கும்.

குறிப்பு 02:

*எலுமிச்சை

கழுத்தை சுற்றி எலுமிச்சை சாற்றை அப்ளை செய்து எலுமிச்சை தோல் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கும்.

குறிப்பு 03:

*பேக்கிங் சோடா
*எலுமிச்சை சாறு

ஒரு பவுலில் தேவையான அளவு பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாக்கவும்.இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கும்.

குறிப்பு 04:

*காபி தூள்
*சர்க்கரை

ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் காபி தூள் மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.பிறகு ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.இதை கழுத்தை சுற்றி அப்ளை செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கும்.