இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை!

0
161
Black box found at the scene of the military plane crash! Hope the clue is gone!

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை!

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, சுலூ மாகாணத்தில் ஜோலோ தீவு பகுதியில், கடந்த 4ஆம் தேதி 96 பேருடன் சென்ற சி-130 ரக விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மோதிய போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் 6 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர். மேலும்  அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி பலரும் இறந்தனர். இந்த வகையில் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் பட்சத்தில், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து கருப்பு பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது விமானம் எப்படி விபத்தில் சிக்கியது என்பதை அறிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும் எனவும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையின் போது விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி சி-130 ரக விமானம் இயக்குவதில் பல வருடம் அனுபவம் பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் உயிர்பிழைத்த அவர்களிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், விபத்துக்குள்ளான விமானம் இரண்டு மூன்று முறை வானத்தில் தலைகீழாக திரும்பியது என்றும் அதை கட்டுப்படுத்துவதற்கு விமானி எவ்வளவோ முயற்சித்தார். ஆனாலும் அது மிகத் தாமதமான முயற்சியாக இருந்தது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அந்த கருப்பு பெட்டி என்பது கருப்பு நிறத்தில் இருக்காது. மேலும் அதில் விமானத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி இருக்கும் என்பதால் அதன் மூலம் ஏதாவது துப்பு கிடைக்கலாம் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.