Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்கழி குளிரை சமாளிக்க உதவும் கருப்பு ஏலம் தேநீர்!! காலை நேரத்தில் உடம்பு கதகதப்பை உணர செய்து குடிங்க!!

இந்திய உணவில் ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஏலக்காயில் பச்சை மற்றும் கருப்பு ஏலக்காய் என்று இரண்டு வகை இருக்கின்றது.இதில் கருப்பு ஏலக்காய் அதிக சத்துக்கள் கொண்ட மூலிகையாகும்.

கருப்பு ஏலத்தில் உள்ள சத்துக்கள்:

*கால்சியம் *மெக்னீசியம் *இரும்பு *துத்தநாகம் *சோடியம் *பாஸ்பரஸ் *பொட்டாசியம் *மாங்கனீஸ் *வைட்டமின்கள்

கருப்பு ஏலக்காய் நெஞ்செரிச்சல்,தொண்டை பிரச்சனை,ஆஸ்துமா,அஜீரணக் கோளாறு போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.குளிர்காலத்தில் உடலை கதகதப்பாக வைத்துக் கொள்ள கருப்பு ஏலக்காய் தேநீர் செய்து பருகி வரலாம்.

தேவையான பொருட்கள்:

1)கருப்பு ஏலக்காய் – ஒன்று
2)தேயிலை தூள் – அரை தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு துண்டு
4)பனங்கற்கண்டு – சிறிதளவு
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

ஏலம் நீர் தயாரிக்கும் முறை:

*முதலில் கருப்பு ஏலக்காயை உரலில் போட்டு தட்டிக் கொள்ள வேண்டும்.கொரகொரப்பான பதத்திற்கு வரும் வரை கொதிக்க தட்டி எடுத்து வேண்டும்.

*பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பின்ச் அளவு இருந்தால் போதுமானது.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

*இதமான சூட்டிற்கு தண்ணீர் வந்ததும் இடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் இஞ்சியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

*அடுத்து அரை தேக்கரண்டி அளவிற்கு தேயிலை தூளை அதில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

*அதற்கு அடுத்து இனிப்பு சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் பருகினால் உடலுக்கு தேவையான கதகதப்பு கிடைக்கும்.

  • *கருப்பு ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேன்மையடையும்.உடலில் உள்ள கொழுப்பை கரைக்க நினைப்பவர்கள் கரு ஏலக்காயை பொடியை வெந்நீரில் கலந்து பருகி வரலாம்.

Exit mobile version