விழி பிதுங்கிய அமைச்சர்கள்! ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்?
தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பல காலமாக ஆலோசனைக் கூட்டம் என்பது மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டிய விஷயங்களை முடிவு செய்து வைத்திருக்கும்.அம் முடிவுகளை அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்து அவர்களிடம் அனுமதி பெறுவது மட்டுமே நடந்து வந்தது.ஆனால் நேற்று நடந்த அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில்,முதல்வர் அனைத்து அமைச்சர்களிடமும் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பாரபட்சமின்றி அனைவரிடமும் அவர்களின் துறைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.அனுபவம் வாய்ந்த துரைமுருகன் அமைச்சர் முதல் தற்பொழுது நுழைந்த மதி வேந்தன் அமைச்சர் வரை அனைவரிடமும் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு,வேலு ஆகியோர் முதலமைச்சர் கேட்ட கேள்வியில் இருந்து நழுவியதாக கூறுகின்றனர்.சில அமைச்சர்களிடம் முதல்வர் அவர்களின் துறை சார்ந்த கேள்விகளை கேட்டபோது அவர்கள் பதிலளிக்க முடியாமல் அவர்களுடைய துணை அதிகாரிகளை உதவிக்கு அழைத்ததாகவும் கூறுகின்றனர்.
அதேபோல அதிமுக ஆட்சியில் இருந்தபோது சில துறைகளில் செயல்பட்டு வந்த முறையிலேயே,தற்போது ஆட்சி மாறிய பிறகும் இறங்குகிறது என்பது முதலமைச்சருக்கு அதிக கோபத்தை உண்டாக்கியது என கூறுகின்றனர்.மேலும் அனைத்து அமைச்சர்களிடமும் இதுவரை எத்தனை திட்டங்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ளது.மேற்கொண்டு அடுத்த புதிய திட்டம் என்ன என்பது குறித்து முதலமைச்சர் கேள்வி கேட்டார் என்றும் கூறுகின்றனர்.முதல்வர் கேட்ட கேள்விக்கு ,யாரும் பதிலளிக்கலவில்லை மேலும் புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
அதே போல எந்த கேள்விகளுக்கு எந்த அமைச்சரிடமும் சரியான பதில் இல்லாமல் பொறுப்பற்ற முறையில் அவர்கள் இருந்ததால் முதல்வர் அதிக அளவு கோபம் அடைந்தார் என்றும் அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றன.இந்தக் கூட்டமானது காலை 11 மணிக்கு ஆரம்பித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்றது.அடுத்த முறை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் பொழுது அனைத்து அமைச்சர்களும் அவர்கள் துறை சார்ந்த புதிய திட்டத்தை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என்று முதலமைச்சர் கடைசியாக கூறியதாக அரசு சுற்று வட்டாரங்கள் பேசுகின்றனர்.முதல்வரின் மறுமுகத்தைப் பார்த்த அமைச்சர்கள் திக்கி திணறி விழி பிதுங்கி உள்ளனர்.