Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடிந்தது தொகுதி பங்கீடு! இன்று வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் அதேபோல பாஜகவிற்கு 20 தொகுதிகள் என்று ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த கூட்டணியில் இருந்து நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி விலகி இருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று இதுவரையில் தெரியாமலே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தொகுதிகளை அடையாளம் காட்டுவதில் இறங்கியிருக்கிறார்கள்.

அதிமுக ஒதுக்கீடு செய்த தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்று முடிவு செய்வதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உடன் நேற்று இரவு பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கியது.சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற திமுகவின் தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாஜகவின் சார்பாக கிஷன் ரெட்டி மாநிலத் தலைவர் முருகன் போன்றோர் பங்கேற்று இருக்கிறார்கள். அதிமுக சார்பாக அமைச்சர்கள் தங்கமணி எஸ் பி வேலுமணி போன்றோரும் பங்கேற்று இருந்தார்கள்.

இரவு ஒன்பதரை மணியளவில் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணி நேரம் நடை பெற்றதாகவும், இதில் நல்ல முடிவு எடுக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது. பாஜக போட்டியிடும் தொகுதிகள் எந்தெந்த தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், பாஜகவின் மாநில தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார். ஆகவே வேட்பாளர்பட்டியல் இன்றைய தினம் வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு அந்தக் கட்சி கேட்ட தொகுதிகள் அனைத்தையும் அதிமுக தர சம்மதித்து இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜிகே மணி தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிவுற்ற பின்னரும் அதன் பிறகும் கூட அதிமுகவின் சார்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் போன்றோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அந்த சமயத்தில் அதிமுக சார்பாக எதிர் வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருக்கின்ற வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் அவர்கள் ஈடுபட்டதாக தெரிய வந்திருக்கிறது.அநேகமாக சென்ற முறை நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின்போது போட்டியிட்ட பலருக்கு இந்த முறை வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல அதிமுக வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிச்சாமி காட்டும் அக்கறை அந்த கட்சியை சேர்ந்த பலரை பயம் கொள்ள வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏனென்றால் குற்றப் பின்னணி இல்லாதவர்கள், அதேபோல தொகுதியில் எந்த ஒரு கெட்ட பெயரும் வாங்காதவர்கள், என்று அவர்களுடைய பின்னணி என்ன அவருடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து பிறகுதான் வேட்பாளராக அறிவித்திருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி என்று சொல்லப்படுகிறது.அந்தவகையில், பார்த்தோமானால் சென்ற முறை அதிமுக சார்பாக போட்டியிட்ட பலருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது என்றுதான் சொல்கிறார்கள். இதில் ஒரு சில முக்கிய அமைச்சர்களும் அடங்கி இருக்கிறார்களாம்.

Exit mobile version