பிளாக்பஸ்டர் அடித்த ஜவான்!! திரையரங்குகளில் இனிமேல் தீபாவளி கொண்டாட்டம் தான் சாதித்த அட்லீ!!
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் குறித்து தற்போது விமர்சனங்கள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில், என தொடர் வெற்றி படங்களை கொடுத்த அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்துள்ளார் அட்லி. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.
இவர்களோடு சஞ்சய் தத் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கௌரவ இடத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இந்த படமானது இந்தி, தமிழ், தெலுங்கு, மொழிகளில் வெளியாகிறது. முதலில் ஜூன் மாதம் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்ததால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் குறித்து விமர்சனங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி பரவலாக்கி வருகின்றனர்.
ஷாருக்கானுக்காகவும், ரசிகர்களுக்காகவும், அதிரடி ஆக்சன், மாஸ், மிரட்டல், நடிப்பு, காதல் காட்சி, என அட்லி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளதாக ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இந்த படத்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங் என்றும் பிளாக்பஸ்டர் படம் என்றும் ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். எனவே இன்னும் சில வாரங்களுக்கு தியேட்டர்களில் தீபாவளி கொண்டாட்டமாக இருக்கப் போகிறது என ஷாருக்கானின் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதில் ஒரு ரசிகர் இப்போதுதான் ஜவான் படத்தை பார்த்தேன். ஷாருக்கான் ஏகப்பட்ட கெட்டப்புகளில் தனது மொத்த நடிப்பையும் இந்த ஒரு படத்தில் இறக்கி நடித்து அசத்தியுள்ளார். இன்கிரெடிபிளான அவரது நடிப்பை பார்த்துவிட்டு அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/amanaggar02/status/1699605992139595944/mediaviewer