அடிபட்டு ஏற்படும் இரத்தக்கட்டு!!! இதை சரி செய்ய உதவும் 5 டிப்ஸ்!!!
நமக்கு அடிபட்டு ஏற்படும் இரத்தக்கட்டை சரி செய்வதற்கு எளிமையான வீட்டு முறையிலான 5 டிப்ஸ் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நமக்கு கைகளில் அல்லது கால்களில் அல்லது உடலில் வேறு எங்கு அடிபட்டாலும் இரத்தக்கட்டு ஏற்படும். இந்த இரத்தக்கட்டு என்பது அடிபட்ட பிறகு அடிபட்ட இடத்தில் இரத்தம் உறைந்துவிடும். இதுதான் இரத்தக்கட்டு என்கிறோம்.
இந்த இரத்தக்கட்டு ஏற்படும் பொழுது இரத்தம் உறைந்து அந்த இடத்தில் வீக்கம் ஏற்படும். இந்த இரத்தக்கட்டுகளை சில சமயங்களில் வெறும் கண்களால் பார்க்க முடியும். அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் நாட்கள் செல்ல செல்ல இரத்தக்கட்டு உள்ள இடம் கருப்பாக மாறும். இதை சரி செய்வதற்கான மருத்துவ முறைகளை பற்றி பார்க்கலாம்.
இரத்தக்கட்டை குணப்படுத்த உதவும் 5 டிப்ஸ்…
* புளி சிறிதளவும் கல்லுப்பு சிறிதளவும் எடுத்து இரண்டையும் ஒன்றாக வைத்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேட்டை இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவினால் இரத்தக்கட்டு குணமாகும்.
* இரத்தக்கட்டு உள்ள இடங்களில் மஞ்சள் பொடியை சிறிதளவு சூடான தண்ணீரில் சேர்த்து பேஸ்ட் போல செய்து தேய்க்க வேண்டும். இதன் மூலமாகவும் இரத்தக்கட்டு குணமாகும்.
* வெள்ளைத் துணியில் மஞ்சளை வைத்து இரத்தக்கட்டு இருக்கும் இடத்தில் கட்டு போட்டாலும் இரத்தக்கட்டு குணமாகும்.
* ஆமணக்கு மற்றும் நொச்சியை கலந்து துணியில் வைத்து இரத்தக்கட்டு உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பதன். மூலமாகவும் இரத்தக்கட்டை குணப்படுத்த முடியும்.
* அமுக்கிராங் சூரணத்தை சூடான பாலில் கலந்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளில் குடித்து வருவதன். மூலமாகவும் இரத்தக்கட்டு பிரச்சனையை சரி செய்யலாம்.