வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் இந்த சசிகலாவுக்கு உடல்நலம் பாதிப்படைந்ததை தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் சசிகலா. அந்த சமயத்தில் அவருடைய உடல்நிலை மிக மோசமாக இருந்ததை தொடர்ந்து, தினகரனின் முயற்சியால் விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார் அந்த மருத்துவமனையில் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின் அவருக்கு உடல்நலம் சீராகி வருவதாக மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி சசிகலாவை பெங்களூர் சிறை நிர்வாகம் விடுதலை செய்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு வந்த காவல்துறையினரின் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில், சுமார் ஆறு தினங்களுக்கு பின்னர் மீண்டும் சசிகலாவிற்கு ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அவருடைய உடல்நிலை சீராக இருந்து வருவதாகவும் அதோடு மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைத்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. சசிகலாவிற்கு உடலில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருப்பதால் அதற்கு ஏற்றார்போல் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.