சேலத்தில் உயிரை காக்க போராடும் ரத்ததான குழு !!

0
121

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பரிதி என்பவர் சேலம் பிளட் டோனர்ஸ் என்ற ரத்ததான தன்னார்வலர் குழுவை தொடங்கி பல இளைஞர்களை இதில் இணைத்துள்ளார். இவருக்கு சேலம் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு விபத்தில் உயிருக்கு போராடி அவர்களுக்கும் ரத்த தானம் செய்து வந்துள்ளார். மேலும், இவர் தேவையில்லாத இருப்பவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கி கொடுத்தால் ஒரு சேவை மனப்பான்மையில் செய்து வருகின்றார்.

சமீபத்தில் “அண்ணா உயிருக்கு போராடிட்டு இருக்காரு ஒரு யூனிட் இரத்தம் தேவை படுது” என்று அழைப்பு வந்ததும், சில மணி நேரத்தில் உதவி செய்ததற்கு “ஜென்மத்துக்கும் உங்களை மறக்க மாட்டேன் அண்ணா ரத்தம், கொடுத்து அவர்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றிண்ணா “என்று அலைபேசியில் நெழ்ச்சியை இளம்பரிதி போன் கால்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

சேலம் பிளட் யூனிட் அமைப்புகள் என 500 -க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.அதில் தர்மபுரியில் இதயம் அமைப்போடு இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.  கொரோனா ஊரடங்கு கடந்த 4 மாதங்களில் 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்ததானம் செய்துள்ளதாகவும் இந்த சேவையை தமிழ்நாடு முழுவதும் விரிக்கப்பட்ட எதிர்காலத்தில் லட்சியம் என்று கூறியுள்ளனர்.
உயிரை காப்பாற்றுவதற்காக சேலம் லெட் டோனர்ஸ் தன்னார்வலர்கள் அவர்களின் எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்’