Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த ப்ளூ டிக் சேவை! கட்டண உயர்வால் அதிர்ந்து போன பயனர்கள்!

Blue tick service is back! Users shocked by the rate hike!

Blue tick service is back! Users shocked by the rate hike!

மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த ப்ளூ டிக் சேவை! கட்டண உயர்வால் அதிர்ந்து போன பயனர்கள்!

உலகில் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அவர் அந்த நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்தே பல முடிவுகளை எடுத்தார். முதலில் டுவிட்டர் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தில் அதிகாரபூர்வ பக்கமாக பிரபலங்கள்,புகழ்பெற்றவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் கணக்குகளை தனித்துவமாக காட்ட ப்ளூ டிக் சேவை இருந்தது.

இந்த சேவைக்கான கட்டணத்தை எலான் மஸ்க் அதிரடியா உயர்த்தினார். அந்த கட்டணம் உயர்ந்ததும் போலி தகவல்களை பரப்பும் பலரும் அதிக கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் கணக்குகளை பெற்றனர். அதனால் ப்ளூ டிக் சேவையை எலான் மஸ்க் தற்காலிகமாக நிறுத்தினார்.

அதனை தொடர்ந்து ப்ளூ டிக் சேவைக்கு ஒவ்வொரு துறைக்கும் தனி தனி கலர் உருவாக்கப்பட்டது. அந்த கலர்களை டுவிட்டர் நிறுவன குழு ஒவ்வொரு துறைக்குமான கலர்களை பிரித்து தருவார்கள் என எலான் மஸ்க் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் டுவிட்டர் ப்ளூ டிக் சந்தா தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ப்ளூ டிக் சேவையை பெற மாதம் ரூ 900 கட்டணமாக வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்தில் வெரிபைட் செய்யப்பட்ட போன் நம்பரை கொண்டு மெம்பர்ஷிப் வாங்கியவர்கள் தானாகாவே தங்கள் ப்ரோபைலில் ப்ளூ டிக் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.மேலும் முன்னதாக இருந்த முறைப்படி ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு தனியாக விண்ணபிக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version