Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

6.1 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் BMW புது ரக கார் அறிமுகம்!!

கார் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமாக திகழும் BMW கார் நிறுவனம் ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் முதல் முறையாக இந்த நிறுவனம்  தற்போது புது ரகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

BMW நிறுவனம் புதிதாக “3 சீரிஸ் கிரான் டூரிஸ்மோ” காரை  அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் மதிப்பு ரூ.42.5 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்த காரின்  சிறப்பம்சம் என்னவென்றால்,  கூபே வடிவமைப்புடன் விசாலமான உள் வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த காரின் செயல்திறன் ஆனது உயர்தர செயல்திறனை கொண்டுள்ளது.

மேலும் இந்த கார் ஸ்டார்ட் செய்த 6.1 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் அளவிற்கு வேகமாக இயங்கும்.

மேலும் இந்த காரில் பயணம் செல்வோரின் பாதுகாப்பை கருதி 6 ஏர்பேக்குகள் காரில் இடம் இடம்பெற்றிருக்கும்.

தற்போது  கொரோனா  பொது முடக்கத்தில் காரணமாக வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் இடத்திற்கு கார் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து டோர் டெலிவரி செய்யப்படும்.

மேலும் வாகனத்தின் ஆவணங்களும் முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு பாதுகாப்பான முறையில் வைத்து அவர்களின் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் BMW நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். 

Exit mobile version