BODY NUMBNESS PROBLEM: உங்களது கால் அடிக்கடி மரத்து விடுகிறதா? அப்போ கல் உப்பை இப்படி ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள்!
உங்களில் பலர் அடிக்கடி கால் மரத்து போதல் பிரச்சனையை சந்தித்து வருவீர்கள்.ஒரே இடத்தில் அசையாமல் நீண்ட நேரம் காலை தொங்க போடுதல்,அமர்தல் போன்ற நிலையில் இருந்தால் கால் மரத்து போய்விடும்.இதனால் கால்களை நகர்த்துவதில் சிரமம் ஏற்படும்.சில நிமிடங்களுக்கு பிறகு இந்த மரத்து போதல் சரியாகும்.
கால் மரத்து போதல் பாதிப்பு யாருக்கு ஏற்படும்?
*நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும்.
*குடி பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும்.
*உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு கால் மரத்து போகும்.
*மணிக்கட்டுகளுக்கு அதிக வேலை கொடுப்பவர்களுக்கு மரத்து போதல் ஏற்படும்.
*வைட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்கு கால் மரத்து போகும்.
தீர்வு 01:
1)கல் உப்பு
2)தண்ணீர்
ஒரு அகலமான பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு கொதிக்க வைத்த நீரை ஊற்றி சிறிது கல் உப்பு சேர்க்கவும்.பிறகு அதில் கால்களை வைத்து நன்கு தேய்க்கவும்.இப்படி செய்து வந்தால் கால் மரத்து போதல் பாதிப்பு சரியாகும்.
தீர்வு 02:
1)எலுமிச்சை சாறு
2)உப்பு
ஒரு கிளாஸ் நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலக்கி பருகி வந்தால் கால் மரத்து போதல் குணமாகும்.
தீர்வு 03:
1)பாதாம் பருப்பு
2)முந்திரி
ஒரு கிண்ணத்தில் ஐந்து பாதாம் பருப்பு மற்றும் ஐந்து முந்திரி பருப்பு போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.மறுநாள் இந்த பருப்பை சாப்பிட்டு வந்தால் கால் மரத்து போதல் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
தீர்வு 04:
1)சின்ன வெங்காயம்
2)தேன்
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகவும்.இந்த பானம் கால் மரத்து போதலை சரி செய்ய உதவுகிறது.