தேங்காய் எண்ணெயை இப்படி பயன்படுத்தினால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது 100% கட்டுப்படும்!!

0
248
Body odor is 100% controlled by using coconut oil like this!!

உடலில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருந்தால் உடல் துர்நாற்றம் ஏற்படும்.இதை கட்டுப்படுத்த எத்தனை முறை குளித்தாலும் உரிய பலன் கிடைக்காது.உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்பட வாசனை திரவியங்களை பயன்படுத்துவதால் எந்த பயனும் ஏற்படாது.ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உடலில் துர்நாற்றம் வீசுவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:

*தேங்காய் எண்ணெய் – 50 மில்லி
*விளக்கெண்ணெய் – 50 மில்லி

பயன்படுத்தும் முறை:

கிண்ணம் ஒன்றில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 50 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு இதை உடல் முழுவதும் அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு வெந்நீரில் குளியல் போட்டால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படும்.தேங்காய் எண்ணெயில் இருக்கின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உடலில் வளரும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.இதனால் உடலில் துர்நாற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

*தக்காளி – ஒன்று

பயன்படுத்தும் முறை:

ஒரு பெரிய சைஸ் தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உடலில் ன்=துர்நாற்றம் வீசும் பகுதியில் அப்ளை செய்து அரை மணி நேரம் உலர விடவும்.

அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் குளித்தால் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.இந்த தக்காளி பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

*வேப்பிலை – ஒரு கைப்பிடி
*மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

ஒரு கைப்பிடி வேப்பிலையை நீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வேப்பிலையை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை வேப்பிலை பேஸ்ட்டில் போட்டு மிக்ஸ் செய்து உடலில் பூசி குளித்தால் வியர்வை துர்நாற்றம் கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:

*எலுமிச்சை தோல் – ஒரு கப்
*கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:

முதலில் 10 முதல் 15 எலுமிச்சை தோலை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை உடல் முழுவதும் பூசி வெது வெதுப்பான நீரில் குளித்து வந்தால் உடல் துர்நற்றம் கட்டுப்படும்.