Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“இ-பாஸிற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ரத்தம் குடிக்கும் ஓநாய்கள்” எனக்கூறி கொதித்தெழுந்த உயர்நீதிமன்றம்

கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால் மாநில மற்றும் மாவட்ட எல்லைகளைத் தாண்டி சென்று வருவதற்கு இ பாஸ் கட்டாயமாக இருக்கிறது.

இந்தச் சூழலில் வியாபாரிகள், ஓட்டுநர்கள், பொதுமக்கள் என பலதரப்பட்ட வகையிலும் எல்லை தாண்டி சென்று வர சிரமமாக இருப்பதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இபாஸினை வாங்குவதற்காக, சில அதிகாரிகள் லஞ்சமாக பணம் கேட்பதாகவும், பணம் கொடுத்தால் மட்டுமே இ பாஸ்
தருவதாகவும் நிர்ப்பந்திக்கின்றனர். ஆகையால் மக்களும் லஞ்சம் கொடுத்தே இபாஸினை வாங்கிச் செல்கின்றனர்.

Boiling High Court says "officials who bribe e-pass are blood-drinking wolves"

 

திருப்பூர் மாவட்டத்தில் நான் தனியார் நூற்பாலையில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ள திருவண்ணாமலையைச் சேர்ந்த 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மீட்பதற்காக தமிழ்தேசிய மக்கள் கட்சி சார்பாக, அதன் தலைவர் சி.எம்.சிவ பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில், நூற்பாலையில் இருந்து மீட்கப்பட்ட மாணவிகளை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என கண்காணித்து விசாரிக்கும்படியும், திடீர் சோதனைகளை அவ்வப்போது நடத்தவேண்டும் எனவும் காவல்துறை, தொழிலாளர் நலத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழு போன்ற அமைப்புகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் பிறகு மேற்கொண்டு பேசிய நீதிபதிகள், “கொரோனா தொற்று காலத்திலும் ரத்த தாகம் கொண்ட வெறிபிடித்த ஓநாய்கள் போல ஊழல்கள் செய்து வரும் அரசு ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும், இ பாஸ் வழங்குவதற்கு லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி அந்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version