தமிழக அரசு போட்ட தடை! கொதித்தெழுந்த மக்கள்!

0
244

ஆரம்ப காலம் தொட்டே வன்னியர்களுக்கான அரசின் இட ஒதுக்கீடு போன்ற பல போராட்டங்களில் வன்னியர்களுக்கு முன் களத்தில் நின்று தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடியவர் மாவீரன் காடுவெட்டியார் என்று வன்னியர்களாலும் மற்றும் தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் ஜெ குரு நாதன் தான் சார்ந்த சமுதாயத்திற்காக அந்த சமுதாயத்திற்கு சமூகத்தில் அனைத்து விதமான சலுகைகளும் கிடைத்து அந்த சமுதாயத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து போராட்டக் களத்திலேயே தன்னுடைய வாழ்வை நடத்தி வந்தவர் மாவீரன் காடுவெட்டியார்

தொடக்கத்திலிருந்தே வன்னியர் சங்கத்தின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அவர்களால் நியமிக்கப்பட்டு தன்னுடைய இறுதி மூச்சு வரை அந்த சங்கத்தின் தலைவராக அந்த சங்கத்தை வெற்றிகரமாக வழி நடத்தி வந்தவர் மாவீரன் காடுவெட்டியார். அதுமட்டுமல்லாமல் வன்னியர் சமுதாயத்திற்கு எதிரான பல செயல்களில் அரசாங்கமும் ஒரு சில அமைப்புகளும், கட்சிகளும் ஈடுபட்ட நேரங்களிலெல்லாம் அஞ்சாநெஞ்சனாக போராட்ட களத்தில் முன்னின்று அனைவரையும் ஒருங்கிணைத்து,அரவணைத்து சென்றதோடு வன்னியர்களுக்காக குரல் கொடுத்தவர்.

அவர் மறைந்த பின்பும் இன்று வரையில் வன்னியர்கள் ஒவ்வொருவரின் நெஞ்சத்திலும், அவர்களது இல்லத்திலும் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் மாவீரன் காடுவெட்டியார். இப்படிப்பட்ட ஒருவரின் பிறந்த நாள்தான் இன்று ஒரு மாபெரும் கட்டுக்கடங்காத சமுதாயத்தையே தன் விரல் அசைவில் வைத்திருந்த மாவீரன் காடுவெட்டியார் பிறந்தநாளை அவர் சார்ந்த வன்னியர் சமூகம் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கின்றது இந்த நாளில் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அவரை வணங்கி வர வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு வன்னியரின் எண்ணமாக இருந்து வருகிறது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாகவே அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அவர் நினைவிடம் இருக்கும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் காடுவெட்டி என்ற கிராமத்தில் தமிழக அரசின் சார்பாக 144 தடை உத்தரவு போடப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக, அந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.

இதுவரையில் எத்தனையோ ஜாதி சங்க தலைவர்களின் பிறந்த நாளை அரசு விழாவாக எடுத்து கொண்டாடி வருகிறது தமிழக அரசு. ஏனென்றால் அந்த தலைவர்கள் அவர்கள் சார்ந்த சமூகங்களுக்கு மட்டும் இல்லாமல் அனைத்து சமுதாயத்திற்காகவும் ஏதாவது ஒரு வகையில் குரல் கொடுத்தார்கள் என்று சான்று வைக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசு தெரிவிக்கும் அதே காரணத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து வன்னிய மக்களுக்காக தன்னுடைய இறுதி மூச்சு வரை முன்கலத்தில் நின்று போராடியவர் மாவீரன் காடுவெட்டியார். அவர் இறக்கும் வரையில் தன்னுடைய வீட்டைக்கூட பெரிய அளவில் கட்டவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும் அவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற லட்சோபலட்ச வன்னியர் இளைஞர்களும் ,மற்றும் வன்னிய மக்களும், அவருடைய இல்லத்தின் நிலைகண்டு சற்றே கலங்கித்தான் போனார்கள்.

ஏனென்றால் வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி குரு என்று சொன்னாள் தமிழகம் முழுவதிலும் ஒரு மரியாதையும் எதிரிகள் மனதில் ஒருவித பயமும் இருந்து வந்தது அப்படி தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்ட ஒரு மனிதர் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ இருந்திருக்கலாம். இப்படித்தான் இருக்க வேண்டும் எப்படி இருந்தாலும் தன் சமூக மக்களுக்கு நீதி கிடைக்க முன் களத்தில் நின்று போராட வேண்டும் என்ற வாசகத்தை மனதில் நிறுத்தி இறுதிவரை அவருடைய குடும்பத்தை கூட சரியாக கவனிக்காமல் தான் சார்ந்த சமூக மக்களுக்காகவே போராடி வந்தவர் மாவீரன் காடுவெட்டியார்.

அப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் பிறந்தநாள் அன்று அவருடைய நினைவிடத்திற்கு சென்று அவரை வணங்கி வருவதற்கான உரிமை அவர் சார்ந்த சமூகம் மக்களுக்கு மறுக்கப்படுவது தமிழக அரசின் மாபெரும் அநீதி என்று குமுறுகிறார்கள் வன்னிய இன மக்கள்.

ஆகவே அந்த சமுதாயத்தின் மக்களுடைய மனநிலையை கருத்தில் கொண்டு இது தொடர்பாக ஒரு நல்ல முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் அதேபோல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காடுவெட்டி யில் அமல்படுத்தப்படும் 144 தடை உத்தரவு நீக்கப்பட வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். தமிழக மக்கள் அனைவருக்காகவும் தான் அம்மாவின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று மேடைக்கு மேடை பேசிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இந்த மாபெரும் தலைவரின் பிறந்தநாள் அன்று மட்டும் இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் சாமானிய மக்கள்.