Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலிவுட் நடிகர், பணக் கஷ்டத்தால் காய்கறி வியாபாரம் செய்யும் அவலநிலை!

Bollywood Actor

Bollywood Actor

 பாலிவுட் நடிகரான கார்த்திகா சகு, ஒடிசா மாநிலத்தில் கரக்பூர் பகுதியை சேர்ந்தவர். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கும், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கும் பாடிகார்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து  பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் “சூரியவன்ஷி” என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். 

 கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டம் காரணமாக, தற்பொழுது அவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான், அக்ஷய்குமார் நடிப்பில் ரிலீசாக உள்ள “சூரியவன்ஷி” படத்தின் சண்டைக் காட்சியில் நடித்துள்ளேன். இந்த படத்திற்கான படப்பிடிப்பு  கடந்த மாதம் மார்ச் 22ம் தேதி முடிவடைந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தான் சொந்த ஊரான ஒடிசா திரும்பினேன்.

Bollywood actor

இங்கு வந்ததும், மருத்துவ செலவிற்காக நான் சேமித்து வைத்த பணம் முழுவதும் செலவான நிலையில், தலைநகர் புவனேஸ்வரில் வேலை தேடினேன். வேலை கிடைக்காத நிலையில் காய்கறி விற்பனை செய்ய முடிவு செய்தேன். இவ்வளவு கஷ்டத்திலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. நிலைமை இயல்பாக திரும்பியவுடன் மீண்டும் நடிப்பதற்கு செல்வேன்” என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Exit mobile version