பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய்தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் குடும்பத்தில் புற்றுநோயால் சஞ்சய் தத்தின் அம்மாவும், முதல் மனைவியும் இறந்த நிலையில் தற்போது அவரையும் குறி வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய்தத்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு கொரோனா தோற்று இல்லை என்று உறுதியானது.
ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது சமூக ஊடகங்களில் சஞ்சய் தத்தனது ட்விட்டர் பக்கத்தில் “நண்பர்களே, நான் சில மருத்துவ சிகிச்சை காரணமாக சில நாட்கள் திரையுலகிலிருந்து ஓய்வு பெற விரும்புகிறேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள்.
எனது நலம் விரும்பிகள் கவலைப்படவோ தேவையில்லாமல் சிந்திக்கவோ வேண்டாம். உங்கள் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன், நான் விரைவில் நலமுடன் திரும்புவேன்” என அந்த பதிவில் கூறியிருந்தார். சஞ்சய் தத் தற்போது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய்தத்துக்கு ஆறுதல் கூறும் வகையில் “நீங்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஓர் போராளி. இந்த வலி எத்தகையது என்பதை என்னால் உணர முடியும்.
ஆனால் நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். எனவே இந்தக் கடினமான காலக்கட்டத்தையும் எதிர்கொள்வீர்கள் என தெரியும். என்னுடைய பிரார்த்தனை எப்போதும் இருக்கும். விரைவில் மீண்டு வர வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்
”