Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிர்ஷ்டம் கெட்ட துரதிஸ்டவாதி என்று ஒதுக்கப்பட்டேன்: பிரபல நடிகையின் பகிரங்கமான குற்றச்சாட்டு!!

பாலிவுட்டில் சிறந்த நடிகையாக விளங்கும் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

ஆரம்ப காலத்தில் இவர் சினிமா துறைக்கு வந்த போது தனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எனது முதல்  படத்திலேயே மலையாள பிரபல முன்னணி நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தொடங்கிய பின்பு எனக்கு 8 படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தது.

இந்த காலகட்டத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அதற்கு எதிர்மாறாக எனது முதல் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

முதல் படம் நிறுத்தப்பட்டது அறிந்த, மீதமுள்ள எட்டு படங்களின் ஒப்பந்தமான நிறுவனங்கள் “என்னை அதிர்ஷ்டம் கெட்ட துரதிஸ்டவாதி” என்றும் முத்திரை குத்தி படத்திலிருந்து  விலக்கப்பட்டேன்.

இந்த சினிமாத்துறையில் தொடக்கத்தில் எல்லாரும் நிராகரிக்க  பட தான் செய்வார்கள். அதுக்கெல்லாம் கவலைப்படாமல் முயற்சி செய்து  மேலேறி வருபவர்கள் மட்டுமே இந்தத் துறையில் நிலைக்க முடியும் என்று தனது கம்பீரமான பேச்சில் மூலம் பேட்டி அளித்தார்.

 

Exit mobile version