Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!! 2 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட உடல்!!

அண்மையில் பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தொடர்ந்து பல இளம் திரையுலக பிரபலங்கள் தற்கொலை செய்து கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது மும்பையை சேர்ந்த டிவி  சீரியலின் பிரபல நடிகர்  சமீர் ஷர்மா, தனது வீட்டின் சமையலறையில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை விசாரித்து வரும்  போலீசார். சமி ஷர்மா மரணமடைந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம்  என்ற சோகமான செய்தியை பதிவிட்டுள்ளனர்.

சீரியல் நடிகர் சமீர்  வீடு உள்ள குடியிருப்பின் செயலாளர்  தினேஷ் தினேஷ் பத்மா கூறியதாவது காவலாளி சென்றபோது அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சமையல் அறை ஜன்னலை திறந்த போது நடிகர் சமீர் ஷர்மா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது சர்மா.

தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் தற்கொலை செய்து  கொள்ளும் சம்பவத்தால் போலீசாரும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

Exit mobile version