பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், எந்த ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை யுபி சிட்டி அருகே 15 சொகுசு வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பதிவு எண் MH 02/BB2 ஆகும். இதன் மதிப்பு 16 கோடி. இதற்கு அந்த பிரபல நடிகர் காப்பீடு செய்யவில்லை.
போக்குவரத்து கூடுதல் ஆணையர் எல் நரேந்திர ஹோல்கர் தலைமையிலான குழுவினர் மோட்டார் வாகனச் சட்டத்துடன் தான் சொகுசு வாகன உரிமையாளர்கள் இயங்குகிறார்களா என்று சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தான் சரியான காப்பீடு செய்யப்பட வில்லை என்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த ரோல்ஸ் ராய்ஸை காரை ஓட்டி வந்தவர், இந்த வாகனம் முதலில் பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானது என்று கூறினார். மேலும் அவர் அதை 2019 இல் ரூ. 6 கோடிக்கு வாங்கியதாகவும் கூறினார். எனினும், இந்த வாகனத்திற்கு காப்பீடு இல்லை, இது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும், என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர்.
அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் பரிவாஹன் வாகன தரவுத்தளத்தில் வாகன எண்ணை வைத்து வாகன உரிமையாளர் விவரங்களை தேடினோம், ஆனால் உரிமையாளர் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. வாகனம் பெங்களூருவுக்குள் நுழைந்ததும், தேவையான வரிகள் செலுத்தப்பட்டதா என்பதை நாங்கள் ஆராய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.