கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!!

0
147
Bomb blast at Congress office in Kerala Luckily the surviving civilians !!

கேரளாவில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம்!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்!!

கேரளாவில் இன்று அதிகாலை காங்கிரஸ் அலுவலகம் மீது குண்டு வீசப்பட்டது தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் கடத்தல் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக,தங்கராணி சொப்னா கூறிய குற்றச்சாட்டுக்கள் கேரள அரசியல் களத்தில் பெரும் புரலைய கிளப்பி உள்ளது.

இதைதொடர்ந்து பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விமானத்தில் வைத்து பினராயி விஜயனுக்கு எதிராக இளைஞர் கோஷம் போட்டார்கள்.இதைதொடர்ந்து கேரளா முழுவதும் கலவரம் வெடித்தது. காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தொண்டர்கள் நேருக்கு நேர் அடிதடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பல்வேறு தொண்டர்கள் மண்டைகள் உடைக்கப்பட்டது. மேலும் சிலபேருக்கு கை கால் முறிவு ஏற்ப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை கோழிக்கோட்டில் பேராம்பிரா என்ற இடத்தில் காங்கிரஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. மேலும் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.அந்த சமயத்தில் அலுவலகத்தில் எவரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தகவலறிந்து குற்றியாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.காங்கிரஸ் அலுவலகங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் சுதாகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சதீசன் மற்றும் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.