Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தல அஜீத்தின் வீட்டில் வெடிகுண்டு சோதனை:அதிர்ச்சியில் ரசிகர்கள்?

தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் மிகவும் பிரபலமானவர் அதுமட்டுமின்றி சக மனிதர்களாலும்
திரையுலகினர்களாலும் மதிக்கத்தக்க மனிதர். இன்று இவர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக
சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு மர்ம நபரால் ஒரு அழைப்பு வந்தது. மேலும் இதனைக் கூறிவிட்டு நபர் உடனடியாக போனை கட் செய்து உள்ளார்.

இதைக் கேட்டு அதிா்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவே,மேலதிகாரியின் உத்தரவின் பெயரில் காவலர்களும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினரும் சேர்ந்து நடிகர் அஜித்தின் வீட்டுக்கு விரைந்தனர். பின் அங்கு இரண்டு மணி நேர சோதனைகளுக்கு பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வதந்தியை ஏற்படுத்தும் நிலையில் இந்த அழைப்பு வந்துள்ளது என்பதனை யுகித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்த போன் நம்பரை அதிகாரிகள் சைபர் கிரைம் இடம் தெரிவித்தனர்.அவர்கள் அந்த நம்பர் ஆனது விழுப்புரத்தில் உள்ள ஒரு நபர் உடையது என்று சைபர் கிரைம் தெரிவித்தது.இதனடிப்படையில் விழுப்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு வதந்தி கிளப்பிய அந்த நபரை போலீசார் தேடி வருகிறது.

Exit mobile version