Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

முதல்வர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்! நடந்தது என்ன?

சமீபகாலமாக வெடிகுண்டு வீட்டில் உள்ளது என மிரட்டல் விடுவது பேஷன் ஆகிவிட்டது.பிரபல சினிமா துறையில் இருப்பவர்கள் மற்றும் தொழில்துறையில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் இது போன்ற  பல மிரட்டல்கள் வந்துள்ளது.

இதனையொட்டி இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.வெடிகுண்டு மிரட்டல் விட்டவர் 100 என்ற எண்ணிற்கு அழைத்து பேசியுள்ளார்.

வெடிகுண்டு நிபுணர்கள் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி  வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர்.முதலில் சென்னையில் இருக்கும் வீட்டை சோதித்ததில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.அதன் பிறகு சேலத்தில் இருக்கும் வீட்டை சோதனை நடத்தினர்.அங்கேயும் எந்த வித வெடிகுண்டும் இல்லை.இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக திருப்பூர் அருகே ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version