இமெயிலில் வந்த மெசேஜ் .. மாணவர்களை உடனடியாக வெளியேற்றிய பள்ளி நிர்வாகம்!! அடுத்தது தமிழகத்திற்கு தான்!!
வெடிகுண்டு மிரட்டலானது பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தான் வரும். ஆனால் தற்பொழுது பள்ளிகளுக்கே வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளனர். டெல்லியில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது இதுவே முதல் முறையாகும். துவாரகா நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட ஆறு பள்ளிகளுக்கும் மேல் செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் இன்று வழக்கம் போல் தொடங்கி செயல்பட்ட நிலையில் திடீரென்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதனையறிந்த பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் அங்குள்ள ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றினர். மேற்கொண்டு காவல்துறைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த ஆறு பள்ளிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாகவே உள்ளது.
தற்பொழுது வரை அந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பியது யார் என்று தெரியவில்லை மேற்கொண்டு போலீசார் இதுகுறித்து விசாரணையும் செய்து வருகின்றனர்.பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது இதுவே முதல் முறை என்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இது யாரேனும் போலியாக மிரட்டல் விடுத்திருந்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகள் மட்டுமின்றி விமானநிலையங்கள் மருத்துவமனைகளுக்கும் அடுத்தடுத்து மிரட்டல் வந்துள்ளதால் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.மேற்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு இவ்வாறு மிரட்டல் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அவர்கள் அனுப்பியுள்ள மெயிலில் அதிகளவு ரத்த்ககறையை காண இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதனால் அவர்களின் மிரட்டல் இதனுடன் நிற்கப்போவதில்லை என்பதுபோல் உள்ளது.