Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மேற்கு வங்கத்தில் வெடித்தது கலவரம்! வன்முறையாக மாறிய தேர்தல்களம்!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தை மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றன.அந்த மாநிலத்தில் தேர்தலை மையமாக வைத்து கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாகவே அங்கே தேர்தலை 8 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இதுவரையில் ஏழு கட்ட தேர்தல் நடந்து முடிந்திருந்த நிலையில், இன்று கடைசி மற்றும் எட்டாவது கட்ட தேர்தல் காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு கல்கத்தா மாவட்டங்களில் இருக்கும் மொத்தம் 35 தொகுதிகளில் நடைபெற்றுவரும் இன்றைய தேர்தலில் மொத்தம் 285 வேட்பாளர்கள் களம் களம் காண்கிறார்கள்.

இன்று காலை 11 மணி வரையில் 40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்திருக்கின்றன இன்று காலை வாக்குப் பதிவு ஆரம்பித்த சில மணி நேரத்தில் வடக்கு கல்கத்தாவிலுள்ள மகாஜதி சதனுக்கு வெளியே குண்டு வீசப்பட்டது. ஜராசங்கோவை சார்ந்த பாஜக வேட்பாளர் மீனா தேவி புரோகித் தன்னுடைய காரை குறிவைத்து அந்த வீசப்பட்டதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

வெடிகுண்டு வீசிய கும்பல் அவரை கொல்ல முயற்சி செய்தார்கள் என்றும் இது வாக்காளர்களை பயமுறுத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு சூழ்ச்சிகாண செயல் என்று அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும் சொல்லப்படுகிறது.இறுதிக் கட்ட தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திய பின்னர் அந்த மாநிலத்தின் ஆளுநர் ஜெகதீஷ் தங்கர் மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் அனைத்திற்கும், மத்திய பாதுகாப்புப் படையினருக்கும், என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version