Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் டிரம்ப் தான் காரணம்!! லெபனானில் பொழியும் குண்டு மழை!!

Bombs rain down on Lebanon

Bombs rain down on Lebanon

USA:  டிரம்ப் அதிபராக அடுத்த ஆண்டு ஜனவரியில் பதவியேற்க உள்ள நிலையில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் டிரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை இதற்கு முன் இருந்ததை விட தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் தற்போது உள்ள குறிக்கோள் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதிகளை என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளது.

இஸ்ரேல் தற்போது இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வருகிற ஜனவரி பதவியேற்க உள்ளார். அதற்கான தீவிர வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் பதவியேற்புக்கு பின் மத்திய கிழக்கில் மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் காசா மட்டுமின்றி லெபனான் ஆகிய இடங்களில் இருக்கும் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.லெபனானில் வான்வழி தாக்குதலை ஏற்படுத்தியது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர், 30 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் ஏவுகணை மூலம் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த இஸ்ரேல் தீவிர தாக்குதலுக்கு காரணம் டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றுள்ளது தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர் முழுமையாக இஸ்ரேலுக்கு ஆதரவாக நிலைபாட்டை எடுக்கப்போவதாக  தெரிகிறது என்றும், இஸ்ரேலுக்கு எந்த ஒரு கட்டுப்பாடுகளையும் விதிக்க மாட்டார் என அதனால் தான் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Exit mobile version