நடிகர் விஜய் சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர்.இவர் தற்பொழுது சினிமா துறையில் இருந்து விலக போவதாக கூறி, அரசியல் துறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று அரசியலில் அடி எடுத்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து விஜய் தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி உள்ளார் மற்றும் தனது கட்சி கொடி சின்னத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த கொடிக்கான விளக்கம் கேட்டு பெரும் சர்ச்சைகள் எழுந்தன. அவரின் நோக்கம் 2026-இல் நடக்க உள்ள தேர்தலை மையமாக கொண்டுள்ளது என்று பலராலும் கூறப்படுகிறது .
இதன் இடையில் நடிகர் விஜய் இன்ஸ்டகிராமில் ஒரு கணக்கை ஆரம்பித்து மக்கள் மத்தியில் மில்லியன் கணக்கான பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் விஜய் 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் வழங்கி உள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27- ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த மாநாட்டில் நடிகர் ஜீவா கலந்து கொள்வார்களா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.நடிகர் விஜய்யின் மாநாட்டுக்கு சில கலைஞர்கள் செல்வதாக இருக்கிறது நீங்கள் போவீர்களா? என்ற கேள்விக்கு ஜீவா அதற்கான நேரம் இருந்தால் கண்டிப்பாக செல்வேன் என கூறியுள்ளார்.
மேலும் தனது கட்சி கொடிக்கான விளக்கத்தையும் இந்த மாநாட்டில் கூற போகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கேள்வி இடம் பெறுவதற்கான காரணம் தற்பொழுது இயக்குநர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர் ஜீவா, நடிகை பிரியா பவானி சங்கருடன் நடித்த பிளாக் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வடபழனியில் நடை பெற்றது. அதில் ஜீவா பங்கேற்று பேசினார் அப்பொழுது பத்திரிகையாளர்களை ஜீவா சந்தித்தார். இதில் நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு பற்றி ஜீவாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. சூப்பர் குட் ஃபிலிம்ஸில் விஜய்யை வைத்து தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இந்த கேள்விக்கு காரணம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்பது நடிகர் ஜீவாவின் தந்தை நடத்தும் தயாரிப்பு நிறுவனம். இந்த கேள்விக்கு ஜீவா இதற்கான பதில் தெரியாது. ஆனால் விஜய் (69)படத்திற்கு பிறகு அரசியலில் முழு ஈடுபாடு காட்டுவரா! இல்லை சினிமா துறையில் ஆர்வம் கொள்வாரா !என்று தெரியவில்லை.
ஆனால் விஜய் தொடர்ந்து சினிமா துறையில் ஆர்வம் காட்டினால் நூறாவது படமாக கூட அமைய வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.