எலும்பை உறுதியாக்கும் உணவுகள்!

0
165

எலும்பை உறுதியாக்கும் உணவுகள்!

தற்போது நிறைய குழந்தை பெற்ற பெண்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை எலும்பு தேய்மானம். எலும்பின் அடர்த்தி குறைதல். சீக்கிரம் மூட்டு வலி மற்றும் இடுப்பு வலி வருதல். இதற்கான முக்கிய காரணம் உடலில் கால்சியம் சத்து குறைவது தான்.

கால்சியம் சத்து எளிதாக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் என்னென்ன மற்றும் இவற்றை சாப்பிட்டால் உங்களது எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். நன்றாக முடி வளரும். மேலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் மற்றும் ரத்த கொழுப்பு பல நோய்கள் இதனால் கட்டுக்குள் வரும்.  கால்சியம் உள்ள உணவுகள் எவை அவை ஆரோக்கியமான முறையில் உடம்பில் உள்ள எலும்புகளால் எவ்வாறு உறிஞ்சப்படுகின்றன என பார்ப்போம்

1. பிரண்டை:.  பிரண்டை பொடி தொடர்ந்து சாப்பிட்டு வர நமது எலும்புகள் தேய்மானத்திலிருந்து நல்ல ஒரு வளர்ப்பருவத்திற்கு மாறும். எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க செய்கிறது.

2. ராகி:.    மூட்டுகளில் வலி வந்தால் அல்லது மூட்டுகளில் வலு குறைந்துள்ளது. மூட்டுகளில் வலி காலில் வலி ஆகியவற்றை கண்டுபிடிக்க கூடிய டெஸ்ட் சிஆர்பி டெஸ்ட். இது ராகியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சி ஆர் பி டெஸ்டின் மதிப்பை குறைக்க கூடியது. எனவே ராகியும் நமது எலும்பு மண்டலத்திற்கு மிகவும் அவசியமானது.

3. முருங்கைக்கீரை:  இந்த முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய அனைத்து கனிம பொருட்களும் கால்சியத்துடன் சேர்ந்து நமது உடலில் எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது.

4. கறிவேப்பிலை: நம் அன்றாட உணவில் தினமும் எடுத்து வைக்கும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. நம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உறுதிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் இருக்கின்றன.

5.பால், தயிர், யோகர்ட், சீஸ் போன்றவற்றில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. தினசரி ஒரு கப் பால் அருந்தி வந்தால் எலும்புகள் உறுதியாகும். ஆரஞ்சு பழச்சாற்றில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. எலும்புகள் உறுதியாக இருக்க இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் அவசியம்.