Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்கள் மகிழ்ச்சி! பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 வினாக்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக மதுக்கடைகள் அதிகமாக பரவி வந்த காரணத்தால், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்து வந்தனர்.

ஆகவே அனைத்து வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று எல்லோரும் தேர்வுகள் எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், 2 வருடகாலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருந்ததால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைவு ஏற்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்தநிலையில், சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கினர். கடந்த மே மாதம் 5ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஆரம்பமானது.

மாணவர்களின் மன உளைச்சல் உள்ளிட்டவற்றைப் போக்கும் விதமாக உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம், உள்ளிட்ட பாடங்களுக்கிடையே 3 நாட்கள் இடைவெளி வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 28ம் தேதி வரையில் நடைபெற்ற இந்த தேர்வில் 8,22,684 மாணவ, மாணவிகள், தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு வேதியல் வினாத்தாளில் சில குளறுபடிகள் இருந்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் மதிப்பெண்கள் வழங்க தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்திருக்கிறது.

இதுகுறித்து வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் வேதியியல் பாட வினாத்தாளில் பகுதி 1-ல் கேள்வி எண் 9 அல்லது கேள்வி எண் 5ஐ எழுதியவர்களுக்கு முழுமையான மதிப்பெண்கள் மற்றும் 2வது பகுதியில் கேள்வி எண் 29 ஐ எழுதியவர்களுக்கு முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மாணவர்கள் மேற்கண்ட வினாவிற்கான விடையை எழுத முயற்சித்திருந்தால் அதற்கான முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்படும்.

Exit mobile version