போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி!

0
185
#image_title

போனஸ் மதிப்பெண்கள் மாணவர்கள் மகிழ்ச்சி! 

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் கடந்த 6ம் தேதி முதல்  20ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர்.

அதில் ஆங்கில பாடத்தில் 1 மதிப்பெண் பகுதில் 4, 5, 6 கேள்விகள் குழப்பமாக இருந்ததால் அந்த வினாக்களுக்கு மாணவர்களால் பதில் எழுத முடியவில்லை என புகார் வந்துள்ளது. இதுபோல 28வது வினாவும் தவறாக உள்ளது.

இதனை அடுத்து தவறாக கொடுக்கபப்பட்ட ஒரு மதிப்பெண்  பிரிவில் 3 வினாக்களுக்கும் மேலும் இரு மதிப்பெண் பகுதில் 28வது வினாவிற்கும் முழு மதிப்பெண் வழங்கவேண்டும் எனக்கோரிக்கை எழுந்துள்ளது.

வினாத்தாளை ஆய்வு செய்ததில் பிழை இருப்பது உறுதி செய்யபட்டதை அடுத்து இந்த கேள்விகளுக்கு மாணவர்கள் எந்த விடை எழுதி இருந்தாலும் முழு மதிப்பெண்  வழங்க தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதன் படி 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கபட்ட கேள்விக்கு 5 மதிப்பெண்கள்  போனசாக வழங்க தேர்வு துறை அறிவித்துள்ளது. 3ஒரு மதிப்பெண் கேள்விக்கும் ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் வழங்கவுள்ளது.இது மாணவர்கள்  மற்றும் பெற்றோர்களுக்கும் மகிழ்சியை தந்துள்ளது.