வெறும் 25 ரூபாயில் கேஷ்பேக் சலுகைகளுடன் paytm நிறுவனம் 25 ரூபாயில் சிலிண்டரை பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ 825 க்கு விற்கப்படும் கேஸ் சிலிண்டரை 800 ரூபாய் தள்ளுபடி செய்து வெறும் 25 ரூபாய்க்கு நீங்கள் கேஸ் சிலிண்டரை பெற முடியும்.
எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலை ஐநூறு ரூபாய் இருந்து படிப்படியாக இந்த வருடம் 800 ரூபாய் வரை வந்து நிற்கிறது. அன்றாட வேலைக்கு தட்டு தடுமாறும் மக்கள் எல்பிஜி சிலிண்டர் விலைகளை கண்டு பயந்து தான் போயிருக்கிறார்கள்.
இப்பொழுது அதனை சரி செய்யும் விதத்தில் 800 ரூபாய் தள்ளுபடி உடன் இந்த சலுகையை Paytm நிறுவனம் வழங்குகிறது.
பாரத் கேஸ் சிலிண்டரை நீங்கள் Paytm மூலம் முன்பதிவு செய்யும் பொழுது பின் கேஷ்பேகை Paytm நிறுவனம் வழங்குகிறது. இது இந்த மாதம் 30ஆம் தேதி வரை இந்த சலுகை இருக்கும் என தெரிவித்துள்ளது. Paytm மூலம் ஒரு நபர் முதல் முதலாக கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 800 வரை தள்ளுபடி பெறலாம் என அறிவித்துள்ளது.
எப்படி செய்வது என்று பார்க்கலாம்:
முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து Paytm App டவுன்லோட் செய்யுங்கள். அது மற்ற விவரங்களை கேட்டால் அதனை உள்ளீடு செய்யவும். பின் அங்கே இருக்கும் recharge and pay bills என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதில் book a cylinder என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்யவும். எந்த எரிவாயு என்று தேர்ந்தெடுக்க சொல்லும் அதில் பாரத் கேஸ் என்பதை தேர்ந்தெடுத்து செய்து கொள்ளவும். நீங்கள் எல்பிஜி பதிவு செய்த மொபைல் எண் அல்லது ஐடி இருந்தால் உள்ளீடு செய்யவும். அதன் பிறகு அங்குள்ள QR code ஐ ஸ்கேன் செய்து சலுகையைப் பெறலாம்.
இது உண்மையா என்று நினைப்பவர்களுக்கும் Paytm தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அதிகாரப் பூர்வமான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது. Paytm இலிருந்து ரூ .800 வரை கேஷ்பேக் கிடைக்கும். இந்த கேஷ்பேக்கை மற்ற பொருட்களை வாங்க அல்லது உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Dear #BPCL customer,
Now #Paytm pe book karo, #cashback ka fayda lo. @BPCLLPG pic.twitter.com/ryWDNqcG3p— Bharat Petroleum (@BPCLimited) June 10, 2021