ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கும் புத்தகக்காட்சி! முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைகின்றார்!
நேற்று சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பாதிப்பாளர் சங்க தலைவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46 வது சென்னை புத்தகக்காட்சி வரும் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்க உள்ளது.இவை ஜனவரி 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த புத்தகக்காட்சியை ஜனவரி ஆறாம் தேதி மாலை 5.30 மணிக்கு முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.மேலும் இந்த விழாவில் ஆறு பேருக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.க.கருணாநிதி பொற்கிழி விருதுகளையும் தலா ரூ ஒரு லட்சம் ரொக்கப்பரிசையும் முதலமைச்சர் வழங்க இருகின்றார்.
மேலும் தமிழக அரசின் உதவியுடன் ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 3 நாட்கள் அதே வளாகத்தில் சென்னை சர்வதேச புத்தகக்காட்சி நடைபெறுகிறது.இந்த புத்தகக்காட்சியில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சுமார் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.மூன்று நாட்கள் மட்டுமே நடக்கும் சர்வதேச புத்தகக்காட்சிக்கு என 30 குளிரூட்டப்பட்ட அரங்குகள் தனியாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் பதிப்பாளர்களுக்காக மினி அரங்குகளும்,திருநங்கை பதிப்பாளர்களுக்கு என சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகக் காட்சியானது தினமும் காலை 11 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் பாடநூல் நிறுவனம்,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,மத்திய அரசின் சாகித்ய அகடாமி,நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு நிறுவனக்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று வருபவர்களும் பயன்பெறும் வகையில் ஜனவரி 22 ஆம் தேதி வரை புத்தக காட்சி நடத்தப்படும்.