Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

Booked one car got another car!! So what happened!!

Booked one car got another car!! So what happened!!

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

வேறொரு காரில் ஏறிய பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள போகனஹள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

அவரும் அவரது மகனும் காருக்காக காத்து நின்ற போது அந்த இடத்தில் வேறொரு கார் வந்துள்ளது. அப்போது அந்த பெண் அதுதான் தான் பதிவு செய்த கார் என நினைத்து அதில் ஏறி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு தான் தவறுதலாக வேறொரு காரில் ஏறி உள்ளது என்பதை அறிந்த அந்தப் பெண் தவறான வண்டியில் இருப்பதை அறிந்ததும் இறங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அப்போது அந்த காரை நிறுத்திய டிரைவர் திடீரென காரில் இருந்து இறங்கி அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். அந்தப் பெண்ணின் தலையில் பலமாக தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்த மக்கள் அவனை தடுக்கவே அவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். பின்னர் பொதுமக்கள் அந்த பெண்ணை பத்திரமாக காப்பாற்றி காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

டிரைவர் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுவதும் பதிவு ஆனது. அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவியை ஆய்வு செய்து பெண்ணை தாக்கிய பசவ ராஜ் என்ற கார் டிரைவரை கைது செய்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும் செய்தனர்.

மேலும் அந்த டிரைவரிடம் திடீரென அந்த பெண்ணை தாக்கியதற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version