நோய்தொற்று பாதிப்பிலிருந்து விடுபட தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது தமிழ்நாட்டில் இதுவரை 8 கோடியே 83 லட்சத்து 2 ஆயிரத்து 71 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 87.5 சதவீதம் ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 61.45 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே நோய்த்தொற்று உருமாறி புதிய வகை தொற்று வைரஸ் ஆக மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக, ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் ஆரம்பமாகிறது, சென்னை பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகரில் இருக்கின்ற இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.
முன் களப்பணியாளர்கள், 2 தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்கள் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை எந்த வகை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதோ அந்த தடுப்பூசியே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் 35.46 லட்சம் நபர்கள் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இதில் 9.72 லட்சம் பேர் முன்கள பணியாளர்கள், 5.60 லட்சம் பேர் சுகாதார பணியாளர்கள், 20 03 லட்சம் பேர் இணை நோயாளிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்த விதத்தில் 4 லட்சம் பேர் இன்று பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.