பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்

0
178

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 359 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெஜாரிட்டியை கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுவிட்டதால் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறார்.

பிரிட்டன் தேர்தலில் போட்டியிட்ட எஸ்.என்.பி கட்சிக்கு 48 தொகுதிகளும், லிப் டெமாக்ரேட்டிவ் கட்சிக்கு 11 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 22 தொகுதிகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது. மெஜாரிட்டி பெற்று மீண்டும் பிரிட்டனில் ஆட்சி அமைக்கவுள்ள போரீஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.