சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க இந்த மாவீரருடையது!
மாவீரர் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் போனபார்ட். இவர் தனது காலத்தில் மிகவும் ஒப்பற்ற ராணுவ தளபதியாகவும், மிகச்சிறந்த அறிவியல் தலைவராகவும் விளங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர் பல்வேறு ஐரோப்பிய பிரதேசங்களின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடியவர் என்பது நமக்கெல்லாம் சிறிதும் ஐயம் என்பது இல்லை.
இவர் கடந்த 1799ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கடற்படையில் இருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறியபோது, நெப்போலியன் தனது படைகளுடன் முன்னேறிச் சென்று அந்த ஆட்சியை கவிழ்த்தார். அப்போது அவர் எடுத்துச் சென்ற ஆடை, வாள் மற்றும் ஐந்து ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டன. அதுவும் ஏலம் நடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
அதில் இல்லினாய்ஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்ட ராக் ஐலேன்ட் நிறுவனம் அந்த ஏலத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வாள் மற்றும் ஐந்து ஆயுதங்கள் 1.5 பில்லியன் மற்றும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் வரை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் நெப்போலியனின் வாள் உட்பட பல ஆயுதங்களும் 2.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கெவின் ஹோகன் கூறும்போது, தொலைபேசி மூலம் ஏலம் எடுக்கப்பட்டது என்றும், மாவீரன் நெப்போலியனின் வாள் உட்பட ஆயுதங்களை வாங்குபவர்கள் மிகவும் அரிதான வரலாற்று சின்னத்தை தனது வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக அந்த ஆயுதங்கள் அரசு ஆயுத தொழிற்சாலையில் இயக்குனராக இருந்த நிக்கோலஸ் நோயல் பவுடெட் என்பவரால் தயாரிக்கப்பட்டது என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். அதன் பிறகு பேரரசராக முடி சூட்டப்பட்ட பிறகு நெப்போலியன் அந்த வாளை ஜெனரல் ஜீன் ஆண்டோச் ஜூனோட்டிடம் ஒப்படைத்ததாக நம்பப்படுகிறது. ஆனால் ஜெனரல் மனைவி தனது குடும்ப கஷ்டத்திற்கும், கடனை அடைப்பதற்காக வாளை விற்று விட்டார் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.