Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழுக்கு தலை வணங்கு; அதிகாரிகளுக்கு கமலஹாசன் கண்டனம்!

நேற்று, நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நிற்காத சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது, விதி மீறல் மட்டுமல்ல; மாநிலத்தின் தாய்மொழியை அவமதிக்கும் செயல் என தெரிவித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழுக்கு தலை வணங்கு என்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது தகுந்த வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version