Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீனாவை சேர்ந்த சிறுவன் சாதனை! வியப்பில் ஆழ்ந்த சீனர்கள்!

Ren Keyu என்கின்ற சிறுவனுக்கு 14 வயது ஆகிறது. இச்சிறுவன் சீன நாட்டை சேர்ந்தவன். சீனாவில் இருக்கும் Sichuan என்கின்ற  மாகாணத்தில் வசித்து வருகிறான். இவன் தற்போது உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

அதாவது இச்சிறுவன் 7 அடி 3.02 அங்குலம் உயரம் கொண்டவன் ஆவான். இச்சிறுவனை, கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் ஒரே நாளில் வெவ்வேறு கோணங்கள் என மூன்று முறை அளந்து பார்த்துள்ளனர். 

கின்னஸ் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் இச்சிறுவனை நிற்க வைத்து மற்றும் படுக்க வைத்து அளந்து பார்த்துள்ளனர். இச்சிறுவனின் உயரத்தைக் கண்டு வியந்த சீன அதிகாரிகள், ‘உலக அளவில் அதிக உயரம் கொண்ட சிறுவன் இவன்’ என்பதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் சீன நாட்டைச் சேர்ந்த 14 வயதேயான இச்சிறுவன், ‘உலகளவில் அதிக உயரம் கொண்ட சிறுவன்’ என்கின்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளான். அதுமட்டுமன்றி இச்சிறுவனின் தாய், தந்தை இருவரும் 6 அடி உயரத்திற்கு மேல் இருப்பதால், இச்சிறுவனுக்கு மரபணு காரணத்தினால் இந்த அதிக உயரம் இருப்பதாக கருதப்படுகிறது.

Exit mobile version