Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலிக்காக நடிகர் ஷாருக்கானிடம் இலவச டிக்கெட் கேட்ட காதலன்!!! நடிகர் ஷாருக்கான் சொன்ன பதிலை பாருங்க!!!

காதலிக்காக நடிகர் ஷாருக்கானிடம் இலவச டிக்கெட் கேட்ட காதலன்!!! நடிகர் ஷாருக்கான் சொன்ன பதிலை பாருங்க!!!

தனது காதலிக்காக ஜவான் திரைப்படத்தின் இலவச டிக்கெட் தரவேண்டும் என்று ரசிகர் ஒருவர் நடிகர் ஷாருக்கான் அவர்களிடம் கேட்டதற்கு நடிகர் ஷாருக்கான் பளிச்சென்று ஒரு பதிலை சொல்லியிருக்கார்.

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் நடிகர்கள் விஜய், சஞ்சய்தத் இருவரும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ரெட் சில்லிஸ் எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஜவான் திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜவான் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் ஜவான் திரைப்படத்தின் புதிய போஸ்டர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சில மணிநேரங்களில் எக்ஸ் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் ரசிகர்கள் படத்தை பற்றியும் படத்தில் நடித்த நடிகர்கள் பற்றியும் பல கேள்விகளை கேட்டனர். அனைத்து கேள்விகளுக்கும் நடிகர் ஷாருக்கான் அவர்கள் கூலாக பதில் கொடுத்தார். இதில் ஒரு ரசிகர் ஷாருக்கான் அவர்களிடம் “என்னுடைய காதலிக்காக ஜவான் திரைப்படத்தின் டிக்கெட் ஒன்றை இலவசமாக வழங்க முடியுமா?” என்று கேட்டார். மேலும் “நான் ஒரு வீணாப்போன காதலன்” என்றும் தெரிவித்தார்.

இந்த கேள்விக்கு நடிகர் ஷாருக்கான் அவர்கள் “நான் அனைவருக்கும் அன்பை மட்டுமே இலவசமாக அள்ளி கொடுப்பேன். காதல் என்று வரும்பொழுது நீங்கள் மிகவும் மலிவாக நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் காதலிக்காக நீங்கள் டிக்கெட் வாங்குங்கள். உங்கள் காதலியை உங்களுடன் ஜவான் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் தற்பொழுது அனைவரின் மத்தியிலும் கவனத்தை பெற்று வருகின்றது.

 

Exit mobile version