Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்! 

பெண்களுக்கு பாய் பிரண்ட் கட்டாயம்! சிங்கிள் அனுமதி இல்லை கல்லூரி முதல்வர் விடுத்த பரபரப்பு நோட்டீஸ்! 

பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவியர் அனைவரும் கட்டாயம் பாய்பிரண்ட் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கல்லூரி வளாகத்தில் உள்ளே வர அனுமதி இல்லை. என கல்லூரி முதல்வர் கையெழுத்து உடன் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஜகத்சிங்பூரில் உள்ள தனியார் கல்லூரி எஸ்விஎம். இந்த கல்லூரியில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் தான் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

அந்த நோட்டீஸில் உள்ளது இதுதான்.  காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி மாதம் 14- ஆம் தேதிக்குள் மாணவியர் அனைவரும் கட்டாயம் குறைந்தது ஒரு பாய் பிரண்டாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் கையெழுத்து இடம்பெற்ற அந்த போட்டியில் பிப்ரவரி 14-க்குள் மாணவிகள் கட்டாயம் பாய் பிரண்ட் வைத்திருக்க வேண்டும். இது பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் பாய் பிரண்ட் இல்லாமல் தனியாக (சிங்கிள்) வரும் மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தினுள்  நுழைய அனுமதி இல்லை. மேலும் மாணவியர் தங்கள் பாய்பிரண்ட் உடன் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்ட வேண்டும். அன்பை பரப்புங்கள். இவ்வாறு அந்த நோட்டிஸில் அச்சடிக்கப்பட்டு இருந்தது. இதன் கீழ் ஒப்புதல் அளிக்கும் வகையில் கல்லூரி முதல்வர் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.

இதை பார்த்த கல்லூரி மாணவர்கள், மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆசிரியர்கள் இதுகுறித்து முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அவர் தனது கையெழுத்தை யாரோ தவறான முறையில் பயன்படுத்தி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். மேலும் அவர் இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையினர் இந்த புகாரை பதிவு செய்து இந்த செயலில் ஈடுபட்ட நபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version