Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை!

#image_title

காதலன் தற்கொலை! காதலியின் தாயிடம் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கொண்டப்ப நாயனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் செல்போன் விற்பனை கடையில் பணிபுரிந்து வந்தார். அதே கடையில் பணிபுரிந்த ஜோன் சில்வியா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில், எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சசிகுமாரின் பெற்றோர் தங்களது மகனின் காதல் ஆசையை பூர்த்தி செய்ய நினைத்து பெண் வீட்டாரிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளனர். இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த காதல் ஜோடிக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
திருமண நடவடிக்கைகள் நடைபெற்று வந்த நிலையில், சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், வீட்டில் சசிகுமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுது துடித்துள்ளனர்.
இதற்கு காதலியின் தாய், சசிகுமாரை ஏதோ ஒரு காரணத்திற்காக திட்டியுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து சசிகுமார் தனது காதலிக்கு உருக்கமாக மெசேஜ் அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Exit mobile version