Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர்-டாக்டர் R G ஆனந்த் பேட்டி!

#image_title

தமிழக அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர். கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது குறித்து நேரடியாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன்.

புதுக்கோட்டையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு ஆணைய உறுப்பினர் டாக்டர் R G ஆனந்த் பேட்டி.

புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகள் உரிய இடமில்லாமல் தரையில் அமர வைத்து பாடம் சொல்லித் தருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழுவிற்கு புகார்கள் வந்தது.

புகாரின் அடிப்படையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் என்று திடீர் ஆய்வு முற்கண்டார்.ஆய்வு மேற்கொண்ட போது மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மாணவ மாணவிகள் அமர்வதற்கு உரிய இடங்கள் உள்ளதா என்பது குறித்தும் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளான தண்ணீர் வசதி, டாய்லெட் வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட போது உரிய டாய்லெட் வசதிகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி விற்ற ஆணைய உறுப்பினர், உடனடியாக மொபைல் டாய்லெட் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை வழங்கினார்.

அதன் பேரில் உடனடியாக மொபைல் டாய்லெட் அமைக்கப்படும் என்று ஆட்சியில் அந்த இடத்திலேயே உறுதி அளித்தார்.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆணை உறுப்பினர் ஆனந்த் ஆலோசனை அனுப்பினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஆர் ஜி ஆனந்த். அரசு சிறார் கூர்நோக்கு மையங்கள் பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் சிறுவர்கள் மன அழுத்தத்தின் காரணமாக தான் அங்கிருந்து தப்பித்து செல்கின்றனர் கூடுதலாக ஆலோசகர்களை நியமித்து மன அழுத்தம் போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறார் கூர்நோக்கு மையங்களில் பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து ஆணையம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அரசு சரிவர நடவடிக்கை எடுக்காததால் தான் சிறார்கள் அங்கிருந்து தப்பித்து செல்லும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பு.

தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் சமீப காலமாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகளை கண்டறிந்து தவறுகளை சுட்டிக் காட்டி வருகிறது இதனால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு சமீப காலமாக தமிழக அரசு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இது குறித்து நேரடியாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க உள்ளேன்.

புகார் வந்ததும் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ரோடு புதுக்கோட்டை அரசு உயர் துடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக மொபைல் டாய்லெட் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த மாவட்ட ஆட்சியரை ஆணையம் பாராட்டுகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் ஆணையம் ஆட்சியரிடம் உத்திரவாதம் பெற்றுள்ளது.

மேலும் விரைவில் புதுக்கோட்டையில் ஆணையத்தின் சார்பில் குழந்தைகள் மாணவ மாணவிகள் தங்களுடைய குறைகளை புகார்களாக தெரிவிக்கும் கூட்டம் ஒன்று தொடங்கப்பட உள்ளது.

Exit mobile version