பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் இத்தனை நன்மைகளா?

0
406

Brahma Muhurtham in tamil: பொதுவாக அனைவரும் கூறுவார்கள் நாம் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றால் விடியற்காலை எழுந்தால் போதும் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும். விடியற்காலை எழுந்து படித்தால், விடியற்காலை யோகா செய்தால், நடைப்பயிற்சி செய்தால் நம் மனதும், உடலும் ஆராேக்கியமாக இருக்கும் மேலும் நாம் நினைத்தது நடக்கும் என்று.

அந்த வகையில் ஆன்மீக ரீதியாக காலை பொழுதில் விளக்கேற்றினால் மிகவும் நல்லது என்றும், அதிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் நினைத்தது நடக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனை பற்றி இந்த பதிவில் (brahma muhurtham valipadu in tamil) காண்போம்.

பிரம்ம முகூர்த்த நேரம்

பிரம்ம முகூர்த்த நேரம் என்பது விடியற்காலை 4 மணி முதல் 6.30 வரை உள்ளது. குறிப்பாக விளக்கேற்ற வேண்டிய நேரமாக காலை 4 மணி முதல் 5.30 மணி வரை விளக்கேற்ற வேண்டும். ஏனெனில் சூரிய உதயத்திற்கு முன்பாக விளக்கேற்ற வேண்டும்.

எப்படி ஏற்ற வேண்டும்?

காலையில் எழுந்து கட்டாயம் குளித்துவிட்டு பல் துலக்கி விட்டு பூஜை அறையில் உள்ள விளக்கு ஏற்றி வழிபடலாம். மேலும் உடல்நிலை சரியில்லாதவர்கள் காலையில் எழுந்து கை, கால், முகம் கழுவி, பல் துலக்கிவிட்டு, விளக்கேற்றி வழிபடலாம்.

விளக்கேற்றிய பிறகு தூங்க செல்ல கூடாது.

பலன்கள்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் நாம் அவர்களின் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கவலைகள், கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.

கடவுளையும், தேவர்களையும் வணங்க வேண்டிய காலமாக இந்த பிரம்ம முகூர்த்த காலம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த நேரத்தில் விளக்கேற்றி வணங்கினால் நம் வீட்டிற்கு கடவுளின் வருகை இருக்கும். மேலும் உங்களை சுற்றி எப்பொழுதும் நேர்மறையான ஆற்றல்கள் இருந்துக்கொண்டே இருக்கும்.

தொடர்ந்து விளக்கேற்றி வரும் போதே இந்த மாற்றத்தை காணலாம். மேலும் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த காரியம் நடக்க இந்த பிரம்ம முகூர்த்த காலம் வழிவகுக்கும்.

மேலும் படிக்க: Kulavi Koodu Palan: உங்கள் வீட்டில் குளவி கூடு கட்டியுள்ளதா? அப்போ இதற்கு தான் காரணம்..!!