மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக மாறிய பிரேசில்

0
100

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒரு சில நிறுவனங்களின் மருந்துகள், இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. உலகளவில் 2.25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 50000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தாண்டியது.