இதய நோய் வாய்ப்பை குறைக்கும் காலை உணவு!! இந்த உணவுகளை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!!

0
96

மனிதர்களுக்கு காலை உணவு மிக முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது.காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்தே அந்நாள் நமது ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது.வளரும் குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை அனைவருக்கும் காலை உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.

சிலர் காலை நேரத்தில் பரோட்டா,பிரியாணி,கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள்,எண்ணெய் உணவுகளை கட்டுப்பாடின்றி உள்ளே தள்ளுவார்கள்.இதுபோன்ற உணவுகள் நாக்கிற்கு ருசியை கொடுக்கும் என்றாலும் அவை எப்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக் கூடிய உணவுப் பட்டியலில் சேராது.

இதுபோன்ற கெடுதல் தரும் உணவுகளை சாப்பிட்டால் அவை உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இதய நோய்,மாரடைப்பு,உடல் பருமன்,பக்கவாதம்,சர்க்கரை,இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.அதேபோல் அதிக கலோரி நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு எமனாக மாறிவிடும்.

காலை உணவு என்பது பல வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்க வேண்டும்.சிலர் புரோட்டீன்,கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்கின்றனர்.ஆனால் உடலுக்கு அனைத்து சத்துக்களும் தேவைப்படுகிறது.இன்றைய காலத்தில் நோய் பாதிப்பின்றி வாழ வேண்டுமென்றால் நாம் உணவு முறையில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும்.

ஆரோக்கியம் நிறைந்த காலை உணவு:

நாம் உண்ணும் உணவில் கால்சியம்,புரதம்,மெக்னீசியம்,பொட்டாசியம்,நல்ல கொழுப்பு,இரும்பு,மாங்கனீஸ்,நார்ச்சத்து,நீர்ச்சத்து,வைட்டமின்கள் போன்றவை அதிகளவு நிறைந்திருக்க வேண்டும்.காலை உணவில் இனிப்பு,அதிகப்படியான எண்ணெய்,குறைவான நார்ச்சத்து போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உலர் பழங்கள்,உலர் விதைகள்,பச்சை இலை காய்கறிகள்,முட்டை,மீன் போனற்வற்றை சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.காலை நேரத்தில் நெய் உணவு உட்கொண்டால் உடலில் கொழுப்பு சேர்வது கட்டுப்படும்.அதிக பைபர் நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.ஓட்ஸ்,கோதுமை,முழு தானிய உணவுகள் நாள் முழுவதும் உடலை சோர்வாகவிடாமல் பார்த்துக் கொள்கிறது.எனவே இதுபோன்ற காலை உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் அவை நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்கும்.