Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் செவிலியர்கள்!

நோய்த்தொற்று இரண்டாவது அழகி மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்றுப்பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பலவிதமான உத்தரவுகளை பிறப்பித்தாலும் அதனை பொதுமக்கள் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. பொது மக்கள் அலட்சியமாக கருதுவதால் நோய் தொற்று மேலும் அதிகம் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ஆகவே இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டாலினுக்கு பலரும் மருத்துவத்துறையில் புதியதாக நியமிக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான கோரிக்கையை விடுத்திருந்தார்கள் இந்த நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு இருந்த ஆயிரத்து 212 செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

அதோடு இப்போது பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஊதியம் ஆனது 15 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக உயரும் என்று தெரிவிக்கப்படுகிறது 2015 மற்றும் 16ஆம் ஆண்டில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version